Tuesday, September 11, 2018

சமூகம்

ஓநாய்களை  எல்லாம் பிழைக்க தெரிந்தவர்களாகவும்
நேர்மையானவர்களை பிழைக்கத் தெரியாதவர்களாகவும்
சித்தரிக்கும் சமூகமே, புரிகிறது
உன் நரித்தனத்தை நியாயப்படுத்தவே இது என்று 

என் ஊர்

ஊரின் பேரை சொன்னதும் அழுதேன்
எழுந்தேன், தொலைபேசியில் அழைத்தேன் ஊரிலிருக்கும் அப்பாவை  

பிளாஸ்டிக்

சாகாமல் சாகடிக்கும் சகமனிதன் 

பயணம்

முடியக்கூடாது என்று வேண்டுகிறேன் 

அப்பா

இரும்பு மனிதன்
பாசம் அதிகம்
யோசனைகள் குறைவு
கொண்டாடப்பட  வேண்டியவன் 

என் மகள்

காற்றுதான் கொடுக்கிறாள் வாழ்க்கையை தினமும்
கற்க்காமல் நான்தான் இருக்கிறேன், முட்டாளாக 

என் சின்ன மாமா

குடும்பத்துக்காக நேர்ந்துவிட்ட ஆடு, கொஞ்சம்
விரைப்பாதான் இருக்கும்